ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் விநியோகம் துவக்கம்

Published On 2019-03-31 10:14 GMT   |   Update On 2019-03-31 10:14 GMT
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் துவங்கியிருக்கிறது. #JawaMotorcycle



இந்தியாவில் மீண்டும் களமிறங்கியிருக்கும் ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டு ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டு என இரண்டு மோட்டார்சைக்கிள்களை விநியோகம் செய்ய துவங்கியிருக்கிறது.

இரு மோட்டார்சைக்கிள்களின் விநியோககம் பற்றிய அறிவிப்பை ஜாவா பிராண்டு துணை நிறுவனர் அனுபம் தரேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதன்படி இந்தியாவில் முதல் ஜாவா மோட்டார்சைக்கிள் இந்தோரை சேர்ந்த விரேந்தர் சிங் என்பவருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் மோட்டார்சைக்கிளை முன்னாள் ராணுவ அதிகாரி எல்.கே. ஆனந்த் வழங்கினார். இத்துடன் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கும் ஆனந்த் மோட்டார்சைக்கிள்களை வழங்குவார் என தரேஜா தெரிவித்தார்.



நவம்பர் 2018 இல் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இரண்டு மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்தது. ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டு என இரு மோட்டார்சைக்கிள்களின் விலை முறையே ரூ.1.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ.1.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்த ஆண்டு செப்டம்பர் வரை முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இரு ஜாவா மோட்டார்சைக்கிள்களிலும் 293 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 28 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News