ஆட்டோமொபைல்

இந்தியாவில் கே.டி.எம். 250 டியூக் ஏ.பி.எஸ். அறிமுகம்

Published On 2019-03-02 10:42 GMT   |   Update On 2019-03-02 10:42 GMT
கே.டி.எம். இந்தியா நிறுவனம் 250 டியூக் மாடலுக்கு ஏ.பி.எஸ். வசதியை வழங்கியுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம். #KTM250DukeABS



கே.டி.எம். இந்தியா நிறுவனம் 250 டியூக் மாடல் மோட்டார்சைக்கிளுக்கு ஏ.பி.எஸ். வசதியை வழங்கியிருக்கிறது. புதிய 250 டியூக் ஏ.பி.எஸ். விலை ரூ.1.94 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விலையை விட ரூ.13,400 வரை அதிகம் ஆகும். இந்தியாவில் ஏ.பி.எஸ். வசதியில்லாத டியூக் 250 ஏ.பி.எஸ். விலை ரூ.1.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்தில் 125 டியூக் மற்றும் 200 டியூக் மாடல்களுக்கு சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வசதியை வழங்கியது. எனினும் 250 டியூக் மாடலுக்கு டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஏ.பி.எஸ். வசதி 390 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் மார்ச் 31, 2019 வரை கே.டி.எம். இந்தியா டியூக் 250 ஏ.பி.எஸ். இல்லாத மாடலை விற்பனை செய்யும். அதன் பின் இந்த வேரியண்ட் விற்பனை நிறுத்தப்படும். இதன் வடிவமைப்பை பொருத்தவரை டியூக் 250 மாடல் 390 டியூக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.



கே.டி.எம். டியூக் 250 மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் ஹீலோஜன் ஹெட்லேம்ப் யூனிட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் சீட் வழங்கப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ். தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

250 டியூக் ஏ.பி.எஸ். மாடலில் 249சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 30 பி.ஹெச்.பி. மற்றும் 24 என்.எம். டார்க், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இத்துடன் 43 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க்கள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங் அம்சங்களை பொருத்த முன்புறம் 300 எம்.எம்., பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஏ.பி.எஸ். வேரியண்ட் மாடலை தொடர்ந்து கே.டி.எம். இந்தியா 390 அட்வென்ச்சர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளி்ல் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கே.டி.எம். 390 அட்வென்ச்சர் மாடல் தொடர்ச்சியாக சோதனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News