ஆட்டோமொபைல்

இந்திய விற்பனையில் 1000 யூனிட்களை கடந்த ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ்

Published On 2019-02-22 10:11 GMT   |   Update On 2019-02-22 10:11 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் 1000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. #RoyalEnfield #RoyalEnfield650Twins



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 650 ட்வின்: இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விற்பனையில் 1000 யூனிட்களை கடந்துள்ளது. இந்தியாவில் இரு மோட்டார்சைக்கிள்களும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியாவில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் விலை முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.64 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் அந்நிறுவனத்தின் அதிநவீன பேரலெல்-ட்வின் மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.

புதிய 650 சிசி ராயல் என்ஃபீல்டு வாகனங்களுக்கான முன்பதிவு அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிள்களை வாங்க மூன்று மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், சமீபத்தில் வெளியான தகவல்களில் அந்நிறுவனம் உற்பத்தி பணிகளை வேகப்படுத்தி இருப்பதாக தெரிவித்தது. 



புதிய ராயல் என்ஃபீல்டு ட்வின் மோட்டார்சைக்கிள்களில் அதிநவீன கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் ரேசர் தீம், இன்டர்செப்டர் 650 மாடலில் ஸ்கிராம்ப்ளர் வடிவம் கொண்ட கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கிறது. இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் 60களில் பிரபலமான இன்டர்செப்டார் மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. 650 மாடலில் கஃபே ரேசர் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதன் வடிவமைப்பு 1950களில் பிரபலமாக இருந்த கான்டினென்டல் ஜி.டி. 250 மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களில் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. பவர், 52என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News