ஆட்டோமொபைல்

காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் ஹோன்டா சி.பி. ஷைன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-02-08 11:43 GMT   |   Update On 2019-02-08 11:43 GMT
ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சி.பி. ஷைன் மற்றும் சி.பி. ஷைன் எஸ்.பி. மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. #Honda #CBShine



ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட சி.பி. ஷைன் மற்றும் சி.பி. ஷைன் எஸ்.பி. மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள்களில் ஹோன்டா நிறுவனம் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதியை வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் ஹோன்டா சி.பி. ஷைன் சி.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள் விலை ரூ.58,338 மற்றும் ஹோன்டா சி.பி. ஷைன் எஸ்.பி. சி.பி.எஸ். வேரியன்ட் விலை ரூ.64,098 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயணத்தை பாதுகாப்பாக்குவதுடன் இந்தியாவில் ஏப்ரல் 01, 2019 முதல் விற்பனையாகும் புதிய மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதி வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் விற்பனையாக இருக்கும் 125சிசி அல்லது அதற்கும் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். வழங்க வேண்டும். 



ஹோன்டா சி.பி. ஷைன் மற்றும் சி.பி. ஷைன் எஸ்.பி. மாடல்களில் 124சிசி என்ஜின் வழங்கப்பட்டிருப்பதால் இவற்றில் சி.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது. அந்தவகையில் புதிய மோட்டார்சைக்கிள்களில் சி.பி.எஸ். வசதி தவிர எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய மோட்டார்சைக்கிளில் 124சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 10.1 பி.ஹெச்.பி. பவர், 10.3 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
Tags:    

Similar News