ஆட்டோமொபைல்

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2018-10-17 11:15 GMT   |   Update On 2018-10-17 11:15 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 வெளியீட்டு தேதி சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. #interceptor650



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மாடல்களை நவம்பர் 13, 14 அல்லது 15 தேதிகளில் அறிமுகம் செய்யலாம் என தற்சயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்கள் மிலன் நகரில் 2017-நவம்பர் மாதம் நடைபெற்ற EICMA மோட்டார்விழாவில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகமாகின.

சமீபத்தில் சென்னை அருகே இன்டர்செப்டார் 650 மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்பட்டது. இங்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்பு ஆலைகள் அமைந்திருக்கின்றது. இவை மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பு நிறைவுற்று சோதனை செய்யப்படுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் GT 650 மோட்டார்சைக்கிள்களில் 4-ஸ்டிரோக், சிங்கிள் ஓவர்-ஹெட் கேம், ஏர்-கூல்டு 648சிசி பேரலெல்-ட்வின் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த இன்ஜின் ராயல் என்ஃபீல்டு ப்ரிட்டன் மற்றும் சென்னை குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ளனர். புதிய இன்ஜின்கள் 47 பி.ஹெச்.பி. பவர், 52 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News