ஆட்டோமொபைல்

இந்திய சந்தையில் புதிய வடிவமைப்பில் சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published On 2018-09-21 11:29 GMT   |   Update On 2018-09-21 11:29 GMT
சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. #SUZUKI #ElectricVehicle



சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

சுசுகியின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சுசுகி நிறுவனத்திற்கு இந்திய சந்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் சர்வதேச வாகனங்கள் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக மாற்றப்பட்டு, சிறப்பு விலையில் வெளியிடப்படுகிறது. 

ஏற்கனவே சுசுகி நிறுவனம் லெட்ஸ் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் மாடலை ஜப்பானில் விற்பனை செய்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிலும் லெட்ஸ் இ.வி. வெர்ஷன் ஸ்கூட்டர் புதிய வடிவமைப்புடன் வெளியாகும் என தெரிகிறது.

புதிய ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டார் சர்வதேச சந்தைகளில் பொதுவான ஒன்றாக இருக்கும் நிலையில், வெளிப்புற வடிவமைப்பு மட்டும் சுசுகி இந்தியா குழுவினர் மேற்கொள்வர் என தெரிகிறது. இதனால் இந்தியா பயனர்களுக்கு ஏற்ற வடிவமைப்புடன் விற்பனையை அதிகரிக்க முடியும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News