ஆட்டோமொபைல்

ஒரே நாளில் 2000 பேர் முன்பதிவு செய்த ஹூன்டாய் கார்

Published On 2019-05-04 09:41 GMT   |   Update On 2019-05-04 09:41 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. காரை வாங்க ஒரே நாளில் 2000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #Hyundai



ஹூன்டாய் நிறுவனம் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் புதிய காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா, டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மற்றும் ஃபோர்டு இகோஸ்போர்ட் போன்ற கார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஹூன்டாய் தனது புதிய எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவுகளை துவங்கியது. ஆன்லைன் மற்றும் விற்பனையகம் என இருவிதங்களில் புதிய வென்யூ கார் முன்பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் ஹூன்டாய் வென்யூ காரை வாங்க 2000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் முன்பதிவு துவங்கிய முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 84 பேர் ஹூன்டாய் வென்யூ வாங்க முன்பதிவு செய்துள்ளனர். ஹூன்டாய் வென்யூ கார்: இ., எஸ்., எஸ்.எக்ஸ் மற்றும் எஸ்.எக்ஸ். (ஒ) என நான்கு வித மாடல்களில் கிடைக்கும் என தெரிகிறது. 



இவற்றில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மொத்தம் 13 வேரியண்ட்களில் ஹூன்டாய் வென்யூ கிடைக்கும். பெட்ரோல் வேரியண்ட்களில் 1.2 லிட்டர் கப்பா என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 81 பி.ஹெச்.பி. பவர், 114 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

டீசல் வேரியண்ட்களை பொருத்தவரை 1.4 லிட்டர் U2 CRDi என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 219 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ஹூன்டாய் வெர்னா காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

மற்றொரு டீசல் ஆப்ஷன் 1.0 லிட்டர் கப்பா டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட GDI என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 171 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News