ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் அடுத்த தலைமுறை ஹூன்டாய் i20

Published On 2019-06-11 11:28 GMT   |   Update On 2019-06-11 11:28 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை i20 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் அடுத்த தலைமுறை i20 காரை சோதனை செய்கிறoது. மூன்றாம் தலைமுறை ஹூன்டாய் i20 கார் சென்னை அருகில் ஸ்ரீபெரும்புதூர் ஹூன்டாய் ஆலைக்கு அருகில் சோதனை செய்யப்படுகிறது.

ஹூன்டாயின் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையிலும், 2020 ஹூன்டாய் i20 கார் வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படுகிறது.

புதிய காரில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், வழங்கப்படுகிறது. 2020 ஹூன்டாய் i20 கார் தற்சமயம் விற்பனையாகும் காரில் பயன்படுத்தப்பட்ட பிளாட்ஃபார்மிலேயே உருவாகும் என தெரிகிறது. எனினும், புதிய என்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



அடுத்த தலைமுறை ஹூன்டாய் i20 கார் பி.எஸ். VI புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய i20 காரில் பி.எஸ். VI விதிகளுக்கு பொருந்தும் வகையில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பெட்ரோல் மாடல் 81.86 பி.ஹெச்.பி. மற்றும் 114.73 என்.எம். டார்க் செயல்திறனும், டீசல் என்ஜின் 88.76 பி,ஹெச்.பி. பவர், 219.66 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின்கள் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சி.வி.டி. கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

புகைப்படம் நன்றி: IndianAutosBlog
Tags:    

Similar News