ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜீப் ராங்கலர் ரூபிகான்

Published On 2019-05-16 11:13 GMT   |   Update On 2019-05-16 11:13 GMT
2019 ஜீப் ராங்கலர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இது சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



2019 ஜீப் ராங்லர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. முன்னதாக அன்லிமிட்டெட் மற்றும் சஹாரா ட்ரிம்கள் லீக் ஆகியிருந்த நிலையில், தற்சமயம் ரூபிகான் வேரியன்ட் லீக் ஆகியுள்ளது.

நான்காம் தலைமுறை ஜீப் ராங்லர் ரூபிகான் மாடலில் மூன்று கதவுகள் காணப்படுகின்றன. ஜீப் வாகனம் ஆஃப்-ரோடிங் வசதிகளுக்கு பிரபலமானவையாக இருக்கின்றன. அந்த வரிசையில் ராங்கலர் மாடல் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. மூன்று கதவுகள் கொண்ட ரூபிகான் மாடல் ARAI ஸ்டிக்கர்களுடன் காணப்பட்டிருப்பதே இது சோதனை செய்யப்படுவதை உறுதி செய்திருக்கிறது.



புதிய ஜீப் மாடலின் உள்புறம் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஜீப் ராங்லர் ரூபிகான் மாடலில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 259 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 285 பி.ஹெச்.பி. பவர், 325 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வரும் என தெரிகிறது.

புதிய ஜீப் ராங்லர் விலை தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய மாடல்கள் ரூ.58.74 லட்சம் முதல் ரூ.67.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம் நன்றி: ZigWheels
Tags:    

Similar News