ஆட்டோமொபைல்

சோதனையில் சிக்கிய மெர்சிடிஸ் மேபேக்

Published On 2019-05-03 10:04 GMT   |   Update On 2019-05-03 10:04 GMT
மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 மேபேக் ஜி.எல்.எஸ். கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Mercedes



மெர்சிடிஸ் கார்களில் மேபேக் சீரிஸ் மிகவும் பிரபலம். மெர்சிடிஸ் ஆடம்பர கார் ரகங்களில் மேபேக் மாடலுக்கு தனி சிறப்பு இருக்கிறது.

2020 மெர்சிடிஸ் மேபேக் ஜி.எல்.எஸ். கார் சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவற்றில் கார் முழுமையாக ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. 2020 மெர்சிடிஸ் மேபேக் ஜி.எல்.எஸ். கார் அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

சோதனையில் சிக்கியிருக்கும் புதிய மேபேக் கார் வழக்கமான ஜி.எல்.எஸ். மாடல்களின் வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த அழகியலை கொண்டிருக்கிறது. எனினும், காரை உற்றுநோக்கும் போது, இது வழக்கமான எஸ்.யு.வி. மாடலை விட சற்று வித்தியாசப்படுகிறது. காரின் முன்புறம் வித்தியாசமான கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் காரில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.



காரின் பின்புற தோற்றம் நியூ யார்க் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 ஜி.எல்.எஸ். மாடலை போன்று காட்சியளிக்கிறது. எனினும், இந்த கார் வழக்கமான ஜி.எல்.எஸ். போன்று இல்லாமல், இரண்டு-அடுக்கு இருக்கை அமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

மெர்சிடிஸ் மேபேக் ஜி.எல்.எஸ். கார் 4.0 லிட்டர் வி8 மற்றும் 6.0 லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. அறிமுகமாகும் போது புதிய மெர்சிடிஸ் கார் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் ரேன்ஜ் ரோவர் வோக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

புகைப்படம் நன்றி: Motor1
Tags:    

Similar News