ஆட்டோமொபைல்

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 எலெக்ட்ரிக் கார்

Published On 2019-04-02 11:14 GMT   |   Update On 2019-04-02 11:14 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #MahindraXUV300



மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 கார் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மஹிந்திரா சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

உலகம் முழுக்க விலை குறைந்த எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதில் மஹிந்திராவின் எலெக்ட்ரிக் பிரபல நிறுவனமாக அறியப்படுகிறது. மஹிந்திரா எலெக்ட்ரிக் தற்சமயம் இவெரிடோ, ரெவா, இ20 மற்றும் இரண்டு மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வரிசையில் எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் சோதனையின் போது சிக்கியுள்ளது. இது மஹிந்திராவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என்றும் இது பேட்டரி மூலம் இயங்கும் முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.



மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்.யு.வி. 300 மாடலை ரூ.7.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்தது. பிரீமியம் வடிவமைப்பில் சவுகரிய அனுபவத்தை வழங்கும் படி காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெற்றிகர மாடலாக இது இருக்கிறது.

எக்ஸ்.யு.வி. 300 மாடலின் முன்பதிவு அமோகமாக நடைபெறுகிறது. இந்நிலையில், எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் அறிமுகம் பற்றிய அறிவிப்பை வெளியானது. இதைத் தொடர்ந்து மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 எலெக்ட்ரிக் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளன. 



அதன்படி எலெக்ட்ரிக் கார் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் முன்புறம் மட்டும் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் கார் என்பதால் இதன் கிரில் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. சோதனை செய்யப்படும் காரில் ஸ்டீல் வீல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி மாடலில் அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இ.வி. கார் பல்வேறு நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் பவர் டிரெயின்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த கார் இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு மாடலின் விலை குறைவாகவும் அதன் திறன் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

விலை உயர்ந்த மாடலில் அதிகளவு திறன் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியதாக இருக்கும். இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் டாப்-எண்ட் மாடலில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: MotorOctane
Tags:    

Similar News