ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் 2019 டாடா நெக்சான்

Published On 2019-03-25 16:53 GMT   |   Update On 2019-03-25 16:53 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2019 டாடா நெக்சான் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #TataMotors



டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. டாடா டியாகோ, டிகோர் மற்றும் நெக்சான் உள்ளிட்ட மாடல்களின் அடுத்த தலைமுறை மாடல் விரைவில் அறிமுகமாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

அந்த வகையில் மற்ற கார்களைவிட நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் முதலில் அறிமுகமாகும் என தெரிகிறது. இதனை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

டாடா டியாகோ கார் அந்நிறுவனத்தின் இம்பேக்ட் வடிவமைப்பில் ஏப்ரல் 2016 இல் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டாடா டிகோர் கார் மார்ச் 2017 மற்றும் டாடா நெக்சான் கார் செப்டம்பர் 2017 இல் அறிமுகமானது. இந்நிலையில், இம்பேக்ட் 2.0 வடிவமைப்பில் உருவான டாடா ஹேரியர் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்தது.




அந்தவகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து வாகனங்களையும் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு வழங்கி அப்டேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2019 டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்சமயம் டாடா நெக்சான் கார் இம்பேக்ட் 2.0 வடிவமைப்புடன் சோதனை செய்யப்படுகிறது. இந்த கார் சோதனைக்கென வாகனத்தில் இருந்து இறக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக் ஆகியிருக்கிறது. இவை சண்டிகரில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த கார் முதற்கட்டமாக நெடுஞ்சாலை மற்றும் மலைப்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த கார் வெளிப்புற வடிவமைப்பு மட்டுமின்றி, உள்புறமும் அதிகளவு அப்டேட் செய்யப்பட்டு புதிய அனுபவத்தை வழங்கும் படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மாடல்களை போன்றே நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் பெட்ரோல் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களே வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் பெட்ரோல் வேரியண்ட் 1198சிசி, 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும்.

இந்த என்ஜின் 108.5 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் டீசல் வேரியண்ட் 1497சிசி, 4-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 108.5 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இவை மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News