ஆட்டோமொபைல்

ஹோன்டா CB300R ஸ்பை புகைப்படங்கள்

Published On 2019-01-27 11:01 GMT   |   Update On 2019-01-27 11:01 GMT
ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிளின் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #HondaCB300R #Motorcycle



ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. முன்னதாக ஹோன்டா நிறுவனம் தனது CB300R விலை ரூ.2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் புதிய CB300R விளம்பரம் செய்வதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. படப்பிடிப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோன்டா CB300R புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிளின் பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.

இந்தியாவில் ஹோன்டா CB300R என்ட்ரி-பிரீமியம் ஸ்போர்ட் நேக்கட் மோட்டார்சைக்கிளாக இருக்கும். புதிய மோட்டார்சைக்கிள் தற்சமயம் முன்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஹோன்டா CB300R வடிவமைப்பு CB1000R  மாடலை தழுவி அளவில் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.


புகைப்படம் நன்றி: Rushlane

ஹோன்டா CB300R மாடலில் 286சிசி, 4-வால்வ், DOHC, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 32 பி.எஸ். பவர், 27.5 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் மாடலில் வழங்கப்படுகின்றன. இந்தியாவிலும் இதேபோன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இவற்றுடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் கிளஸ்டர், IMU மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படலாம். மேலும் 41 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க் மற்றும் பிரீலோடு-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News