ஆட்டோமொபைல்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் அப்ரிலியா மோட்டார்சைக்கிள்

Published On 2019-01-24 11:17 GMT   |   Update On 2019-01-24 11:17 GMT
அப்ரிலியா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் மாடலான எஸ்.டி.எக்ஸ். 150 இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. #aprilia #motorcycle



அப்ரிலியா நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மோட்டார்சைக்கிள் எஸ்.டி.எக்ஸ். 150 இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

முன்னதாக அப்ரிலியா எஸ்.டி.எக்ஸ். 150 மோட்டார்சைக்கிள் கோவாவில் நடைபெற்ற விற்பனையாளர்கள் சந்திப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விற்பனையாளர்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இந்த மோட்டார்சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டதாக பைக்வாலெ தெரிவிக்கிறது.

ஏற்கனவே அப்ரிலியா மோட்டார்சைக்கிள் நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அப்ரிலியா எஸ்.டி.எக்ஸ். 150 மோட்டார்சைக்கிள் எளிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 


புகைப்படம் நன்றி: Bikewale

இதன் ஹெட்லேம்ப் கூர்மையாகவும், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட டேன்க் கொண்டிருக்கிறது. இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளின் அம்சங்கள் சாதாரணமாகவே இருக்கின்றன. மோட்டார்சைக்கிளின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.

அப்ரிலியா எஸ்.டி.எக்ஸ். 150 மோட்டார்சைக்கிளில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. நியூசிலாந்தில் விற்பனையாகும் இந்த மோட்டார்சைக்கிளில் 17-இன்ச் அலுமினியம் அலாய் வீல்கள் 90/90 டையர்களை கொண்டிருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளின் பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 240 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 104 எம்.எம். டிரம் பிரேக் கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News