ஆட்டோமொபைல்

6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படும் டாடா ஹேரியர்

Published On 2018-08-04 10:50 GMT   |   Update On 2018-08-04 10:50 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. புனேவில் 6-ஸ்பீடு AT கியர்பாக்ஸ் உடன் சோதனை செய்யப்படுகிறது. #tataharrier #Tatamotors


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் சமீபத்தில் புனேவில் சோதனை செய்யப்பட்டது. புதிய எஸ்.யு.வி. மாடலில் 9-ஸ்பீடுக்கு மாற்றாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாடா ஃபியாட் நிறுவனத்தின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய காரில் ஹூன்டாயின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது. 

இந்த கியர்பாக்ஸ் ஃபியாட் க்ரிஸ்லரின் 140 பி.ஹெச்.பி. 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் விலையும் குறைவு என்பதால், டாடா இதை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

டாடா ஹேரியர் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டாடா உருவாக்கிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. #tataharrier #Tatamotors

புகைப்படம் நன்றி: Carwale
Tags:    

Similar News