ஆட்டோமொபைல்
கோப்பு படம்

விரைவில் வெளியாக இருக்கும் ஹூன்டாய் சான்ட்ரோ

Published On 2018-04-16 06:06 GMT   |   Update On 2018-04-16 06:06 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை சான்ட்ரோ இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:

ஹூன்டாய் நிறுவனத்தின் புதி்ய ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் புதிய சான்ட்ரோ இந்தியாவில் கடந்த சில வாரங்களாக சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெளிவாக வெளியாகி வருகிறது.

புதிய கார் சான்ட்ரோ என்ற பெயர் கொண்டிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்படாத நிலையில், முந்தைய மாடலின் வெற்றி மற்றும் சான்ட்ரோ பிரான்டு பெற்றிருக்கும் பிரபலம் காரணமாக இதே பயெர் புதிய மாடலிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 2018 சான்ட்ரோ இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக புதிய சான்ட்ரோவின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்திருக்கும் நிலையில், இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் முந்தைய படங்களை விட தெளிவாக காட்சியளிக்கிறது. புதிய சான்ட்ரோ முந்தைய மாடலை விட அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும் என தெரிகிறது.

அந்த வகையில் புதிய காரின் உள்புறம் அதிக இடவசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூன்டாய் ஹேட்ச்பேக் மாடல் ஹூன்டாய் நிறுவனத்தின் ஃப்ளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 வடிவமைப்பு முறையை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.

புகைப்படம் நன்றி: PowerDrift

இதனால் புதிய காரில் கேஸ்கேடிங் முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப், அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புற வடிவமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு புதிய கேபின், செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிரைவர்-சைடு ஏர்பேக் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொண்டிருக்கலாம்.

இந்தியாவில் ஹூன்டாய் இயான் மற்றும் கிரான்ட் i10 மாடல்களுக்கு மத்தியில் புதிய சான்ட்ரோ அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சான்ட்ரோ ரெனால்ட் க்விட், டாடா டியாகோ, மாருதி சுசுகி செலரியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சான்ட்ரோ மாடலில் 1086சிசி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 70 பிஹெச்பி பவர், 100 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சான்ட்ரோ விலை இந்தியாவில் ரூ.3.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News