ஆட்டோமொபைல்

விரைவில் இந்தியா வரும் மாருதி சுசுகி சோலியோ

Published On 2018-04-07 11:17 GMT   |   Update On 2018-04-07 11:17 GMT
மாருதி சுசுகி நிறுவனம் சோலியோ மாடலினை இந்தியாவில் சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:

மாருதி சுசுகி நிறுவனம் 2012 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்திருந்த சோலியோ எம்பிவி மாடல் தற்சமயம் இந்தியவில் சோதனை செய்யப்படுகிறது. 

குர்கிராமில் சோதனை செய்யப்படும் சோலியோ கார் ஐந்து பேர் அமரக்கூடியதாக இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய சோலியோ மஹேந்திரா சுமோ போன்று காட்சியளிக்கிறது. எனினும் வழக்கமான ஐந்து பேர் செல்லக்கூடிய கார்களை விட ஸ்லைடிங் ரக கதவுகளை கொண்டுள்ளது.

சிக்வீல் மூலம் கசிந்திருக்கும் புகைப்படங்களில் புதிய சோலியோ காரில் 1.2 லிட்டர் K12 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதே இன்ஜின் ஜப்பான்-ஸ்பெக் ஸ்விஃப்ட் மற்றும் சோலியோ மாடல்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இன்ஜின் 92 பிஎஸ் பவர் மற்றும் 118 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதுதவிர டீம்-பிஹெச்பி வலைத்தளம் புதிய சோலியோ சோதனை செய்யப்படுவதை தெரியப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மேம்படுத்தப்பட்ட வேகன் ஆர் போன்று காட்சியளிக்கிறது. வேகன் ஆர் சார்ந்த சுசுகி சோலியோ முன்னதாக பல்வேறு சமயங்களில் கசிந்துள்ளது.

அந்த வகையில் இந்த கார் ஏழு இருக்கை கொண்டிருக்கும் என்றும் இதன் தயாரிப்பு பணிகள் செப்டம்பர் 2018-இல் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த மாடல் இந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய சோலியோ மாடல் இந்தியாவில் டேட்சன் கோ பிளஸ் மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டில் இந்த மாடல் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News