ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா கோவிலில் இருந்து இன்று புறப்படுகிறது

மண்டல பூஜையன்று ஐயப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று ஆரன்முளா கோவிலில் இருந்து சபரிமலை நோக்கி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
சபரிமலை: திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி

சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வரவேற்பு அளிக்க, தீபாராதனை காட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்கு 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

சபரிமலையில் நாளை (20-ந்தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம்போர்டு அறிவித்தது. கூடுதல் பக்தர்கள் வருவதால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

சபரிமலையில் நாளை முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் விதிக்கப்படவில்லை.
சபரிமலையில் 20-ந் தேதி முதல் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

கோர்ட்டு உத்தரவுபடி சபரிமலையில் 20-ந் தேதி முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் 30 நாளில் 42,480 பக்தர்கள் சாமி தரிசனம்

சபரிமலை கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதியில் இருந்து, கார்த்திகை மாதத்தின் இறுதி நாளான நேற்று வரையிலான 30 நாட்களில் மொத்தம் 42 ஆயிரத்து 480 பக்தர்களே சாமி தரிசனம் செய்துள்ளனர்.
சபரிமலையில் 26-ந்தேதி மண்டல பூஜை: 22-ந்தேதி தங்க அங்கி ஊர்வலம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தங்க அங்கி ஊர்வலம் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதி?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா பதில் அளித்துள்ளார்.
சபரிமலையில் கட்டுப்பாடுகளால் சென்னை ஐயப்பன் கோவில்களுக்கு இருமுடிகட்டி செல்லும் பக்தர்கள்

இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்ல முடியாததால் ராஜா அண்ணாமலைபுரம், அம்பத்தூர், செங்கல்பட்டு ஐயப்பன் கோவில்களிலும் இருமுடி கட்டி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம்

முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலை தரிசனத்திற்கு வர வேண்டாம். அவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பணிபுரிபவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடு

சபரிமலையில் பணியாற்றுபவர்கள் 2 வாரங்களுக்கொருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தம்

சாமி தரிசனம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு அதிகளவில் வருகின்றனர். ஆனால் அவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர்
ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் 22-ந் தேதி புறப்படுகிறது

சபரிமலை மண்டல பூஜைக்காக ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி வருகிற 22-ந்தேதி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து ஊர்வலமாக சபரிமலைக்கு கொண்டு வரப்படுகிறது.
சபரிமலைக்கு கூடுதலாக 1000 பேர் வர அனுமதி வழங்கிய போதிலும் குறைந்த அளவே பக்தர்கள் வருகை

சபரிமலைக்கு வார நாட்களில் 2 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் 1000 பேர் கூட வரவில்லை. இதனால் சன்னிதான பகுதிகள் மிகவும் வெறிச்சோடி காணப்பட்டன.
சபரிமலையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா

சபரிமலையில் தேவஸ்தான ஊழியர்கள் உள்பட மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.
சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்கு குறைவான, 65 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதியில்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலையில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி- இன்று முன்பதிவு தொடக்கம்

சபரிமலையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
சபரிமலை செல்லும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை 2 நாட்கள் பயன்படுத்தலாம்

சபரிமலை செல்லும் பக்தர்கள் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அந்த சான்றிதழை 2 நாட்களுக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.