ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவையில் ரூ.6,683 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம்- இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.6,683 கோடி மதிப்பீட்டில் 44 கிலோ மீட்டர் நீளமுள்ள கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டத்தை அமைப்பதற்கான விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அம்மா மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு

இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம் 2022-ல் முடிக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
301 தொழில் ஒப்பந்தங்களில் 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கின

2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இருந்து இன்றைய நாள் வரையில், கையெழுத்திடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 81 திட்டங்கள் வணிக உற்பத்தியை தொடங்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
6 முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் அறிமுகம்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி- ஓ.பன்னீர்செல்வம்

5 பகுதிகள் கொண்ட 133.87 கி.மீட்டர் நீளமுள்ள சாலைகளில் சென்னை எல்லை சுற்றுச்சாலை திட்டம், 12 ஆயிரத்து 301 ரூபாய் மொத்த மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டசபையில் நாளை இடைக்கால பட்ஜெட்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

தமிழக சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.
வருகிற 24-ந்தேதி ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவிக்கிறார்கள்

சென்னை ராயப்பேட்டை தலைமை கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி, கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குகிறார்கள்.
ஓபிஎஸ் சசிகலாவிற்கு ஆதரவு கொடுத்தால் வரவேற்போம்- டிடிவி தினகரன்

அ.ம.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பிறகு அ.தி.மு.கவை மீட்டெடுப்போம் என டி.டி.வி.தினகரன் கூறினார்.
மெட்ரோ ரெயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு வேலை- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே அரசின் விருப்பம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

பிரதமர் மோடி போன்ற ஒப்பற்ற தலைவரை காண்பது அரிது என விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கோவையில், நாளை 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். நடத்தி வைக்கிறார்கள்

கோவையில் நாளை 123 ஜோடிகளுக்கு நடைபெற உள்ள இலவச திருமண விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.
இ.பி.எஸ், ஓ.பி.எஸ். எதிரி அல்ல: எங்கள் ஒரே பொது எதிரி தி.மு.க. தான்- டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எங்களுக்கு எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே பொது எதிரி தி.மு.க. தான் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தலைவர்கள் டெல்லி பயணம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. தலைவர்கள் டெல்லிக்கு செல்ல உள்ளனர்.
எங்களை கட்சியில் இருந்து நீக்க சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது- சூளகிரி அதிமுக நிர்வாகி பேட்டி

தங்களை கட்சியில் இருந்து நீக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எந்த அதிகாரமும் இல்லை என சூளகிரி அதிமுக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுங்கள்... அ.தி.மு.க.வினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தல்

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சசிகலா வருகையால் சலசலப்பு- அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

சசிகலா சென்னை திரும்ப உள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர்.
சசிகலா வருகை- அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

வருகிற 8-ந்தேதி சசிகலா சென்னை வர உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.