வடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பைவிட கூடுதலாகவே மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வருகிறது

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்- விவசாயிகள் கவலை

கொட்டாம்பட்டி பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து மற்றும் கடலை செடிகள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து அழுகி நாசம்

நாஞ்சிக்கோட்டை பகுதியில் மழைநீர் வடியாததால் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் பயிர்கள் அழுகி நாசமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஓட்டப்பிடாரம் பகுதியில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்

ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த தொடர் மழையால் மானாவாரி பயிர்கள் நாசமாயின. எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் இன்று 8,387 கனஅடி நீர் திறப்பு

ஒரு வாரத்திற்கு பிறகு மழை குறைந்ததால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் இன்று 8,387 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கியதால் அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்- விவசாயிகள் வேதனை

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மானாவாரி பயிர்கள் முளைத்து சேதம் அடைந்து உள்ளன. இதுவிவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 6 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி

கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மதிக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை அருகே கனமழையால் ஏரிக்கரை உடைப்பு- 500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின

தஞ்சை அருகே பெய்த கனமழை காரணமாக சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
தொடர்ந்து கொட்டும் கனமழை- தூத்துக்குடி மாநகரில் 5 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடி பகுதியில் சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தொடர் மழை: நெல்லை-திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து 3வது நாளாக துண்டிப்பு

தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக தொடர்மழை பெய்து வருவதால் நெல்லை-திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து 3-வது நாளாக துண்டிக்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரம் வரை கனமழை பெய்யும்- வானிலை மையம்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி முதல் 6 மணி வரை கனமழை பெய்யும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரியில் இன்றும் கனமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கனமழை- அறுவடைக்கு தயாரான 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சேதம்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது.
தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.