சத்தான டிபன் கம்பு அடை

கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது மற்றும் தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை கொடுத்து பலத்தைக் கொடுக்கும். கம்பை தோசை செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்

கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.
10 நிமிடத்தில் செய்யலாம் ஆரஞ்சு தோல் துவையல்

பித்தம், குமட்டல் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அரிசி பாசிப்பருப்பு மிளகு சீரக கஞ்சி

செரிமான கோளாறு உள்ளவர்கள், காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் இந்த கஞ்சியை அருந்தலாம். மேலும் சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த கஞ்சி ஏற்றது.
சிறுநீரகப் பிரச்சனை வராமல் தடுக்கும் இளநீர் சூப்

இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. சிறுநீரகக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கும்.
உடலுக்கு குளிர்ச்சியான கம்பு - கேழ்வரகு கூழ்

கம்பு, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இவை இரண்டையும் வைத்து சத்தான கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
புரோட்டீன் நிறைந்த கொண்டைக்கடலை கட்லெட்

100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. இன்று கொண்டைக்கடலையில் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இட்லி, தோசைக்கு அருமையான வேர்க்கடலை பொடி

இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்களேன். சொல்வதற்கு வார்த்தையே கிடையாதுங்க. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
கால்சியம் சத்து நிறைந்த சோயா பீன்ஸ் சூப்

சோயாபீன்ஸ் சாப்பிடுவதால் உடல் உறுப்புகளை சுற்றி கொழுப்பு படிவதை தடுக்கிறது. தினசரி கால்சியம் சத்தை பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் பாலுக்கு பதிலாக சோயா பீன்ஸினை சாப்பிடலாம்.
புரதம் நிறைந்த டோஃபு சாண்ட்விச்

டோஃபு புரதங்கள் நிரம்பிய உணவுப்பொருள். மாமிசத்திற்கு மாற்றான சிறந்த சைவ உணவாகவும் இருப்பதால், சைவப் பிரியர்களுக்கு டோஃபு சத்தான உணவாகவே உள்ளது.
இரும்புச்சத்து நிறைந்த கம்பு இடியாப்பம்

அரிசியைக் காட்டிலும் கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது கம்பு. அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச்சத்து என அனைத்துச் சத்துக்களுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு.
உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும் சட்னி

டயட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு கூடுதல் ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்கும் காய் இந்த சௌசௌ. சௌசௌ உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.
பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்து இட்லி பொடி

கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பெண்கள் தினமும் இந்த கருப்பு உளுந்தை உணவோடு சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நார்ச்சத்து அதிகம் நிறைந்த கோதுமை வெங்காய மிளகு தோசை

கோதுமையில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் எளிதில் செரிமானம் செய்யக் கூடிய உணவாக கோதுமை இருக்கிறது.
இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்த கருப்பு உளுந்து அடை

கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
சத்து நிறைந்த ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்

ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
வைட்டமின்கள் நிறைந்த பீட்ரூட் - கேரட் சூப்

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் சின்ன வெங்காய புதினா துவையல்

தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
கல்லீரல் பிரச்சனைகளை போக்கும் கறிவேப்பிலை பொடி இட்லி

கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலையின் பொடியையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.