வண்ணத் தொலைக்காட்சி விற்பனைக்கு வந்த நாள் - மார்ச் 25- 1954

வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ. என்ற நிறுவனம் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதன் முதலில் விற்பனைக்கு வெளியிட்டது.
உலக காசநோய் விழிப்புணர்வு நாள் மார்ச்.24, 1996

காசநோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னும் கட்டுக்கடங்காமல் உள்ளது.
பழம்பெரும் பாடகர் டி.எம்.சௌந்தராஜன் பிறந்த தினம் மார்ச் 24, 1923

40 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் பாடிய பெருமைபெற்ற டி.எம்.சௌந்தரராஜன் 1923-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் மதுரையில் மீனாட்சி ஐயங்கார் என்பவருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.
பாகிஸ்தான் குடியரசான நாள்: மார்ச் 23- 1956

பாகிஸ்தான் 1956-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி குடியரசு நாடானது. உலகின் முதன்முதலாக இஸ்லாமிய குடியரசானது பாகிஸ்தான் ஆகும்.
பகத் சிங் இறந்த தினம்- மார்ச் 23- 1931

முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.
பெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் - 1943, மார்ச் 22

பெலாரசின் காட்டின் கிராம மக்கள் நாசி படையினரால் உயிருடன் ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
438 நாட்கள் விண்ணில் கழித்த சோவியத் விண்வெளி வீரர் வலேரி போல்யாகோவ் பூமிக்கு திரும்பினார் - 1995, மார்ச் 22

விண்ணில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டு 438 நாட்கள் விண்ணில் கழித்த சோவியத் விண்வெளி வீரர் வலேரி போல்யாகோவ் 1995 மார்ச் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார்
தென்னாபிரிக்க ஆட்சியிலிருந்து நமீபியா விடுதலை பெற்ற நாள் - மார்ச்.21, 1990

தென்னாபிரிக்காவிடம் இருந்து 1990 இல் நமீபியா விடுதலை பெற்றது.
ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் இறந்த நாள் - மார்ச்.21, 2008

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் இறந்த மார்ச் 21, 2008 இறந்தார்.
உலக சிட்டுக்குருவி தினம்: மார்ச் 20

மார்ச் 20-ம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர்.
துனிசியா பிரான்சிடம் இருந்த விடுதலை பெற்ற நாள்: மார்ச் 20- 1956

துனிசியா வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.
நடிகர் ரகுவரன் இறந்த தினம் - மார்ச்.19, 2008

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008ல் காலமானார்.
சிட்னி துறைமுகப் பாலம் திறக்கப்பட்ட நாள் - மார்ச்.19, 1932

1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் "ஜோன் லாங்" இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
ஒத்துழையாமை இயக்கம்: காந்திக்கு ஆறு ஆண்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் - மார்ச்.18, 1922

பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.
விண்வெளியில் மனிதன் முதன்முதலாக நடந்த தினம் - மார்ச். 18, 1965

சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார்.
இலங்கை கிரிக்கெட் அணி முதன்முதலாக உலககோப்பை வென்ற நாள் மார்ச் 17, 1996

ரணதுங்கா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 1996-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே நாளில் நடந்த உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன்முதலாக கோப்பையை வென்றது.
107 பயணிகளுடன் அமெரிக்கா விமானம் காணாமல் போன நாள்- மார்ச் 16- 1962

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானம் 107 பயணிகளுடன் மேற்கு பசிபிக் பெருங்கடலில் சென்றபோது காணாமல் போனது.
அமெரிக்காவின் 4-வது ஜனாதிபதி ஜார்ஜ் மாடிசன் பிறந்த தினம்- மார்ச் 16- 1751

ஜார்ஜ் மாடிசன் ஐக்கிய அமெரிக்காவின் நான்காவது குடியரசுச் தலைவர் ஆவார். இவர் 1809 முதல் 1817 வரை குடியரசுத் தலைவராக இருந்தார்.
சிரியாவில் உள்நாட்டு போர் மூண்டது: மார்ச் 15- 2011

சிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனித்தனியே போராடி வந்தனர்.
ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டார்: கி.மு. 44- மார்ச் 15

அரண்மனையின் ஆலோசனை மண்டபத்தில் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து கி.மு. 15-03-44 அன்று சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர்.
சீனாவில் தொழிற்சாலை மீது விமானம் விழுந்து 200 பேர் பலி - மார்ச் 1979

சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் தொழிற்சாலையின் மீது விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் 200 பேர் பலியானார்கள்.