
இவ்விடம் மலைப்பாறைகளாலும், மணலாலும் சூழ்ந்துள்ளது, மேலும் சுற்று வட்டாரத்தில் ஐந்து உப்புக்கற்கள் கொண்ட வீச்சுகள் உள்ளன.
பொக்ரான் தற்பொழுது இந்திய அரசின் அணுக்கரு வெடிப்புப் பரிசோதனைத் தளமாக இயங்கி வருகிறது. 18-5-1974 அன்று இங்கு முதல் அணுககரு வெடிப்புப் பரிசோதனை (சிரிக்கும் புத்தர்) நடந்தேறியது. பிறகு 1998-ம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் மேலும் ஐந்து பரிசோதனைகளை நிகழ்த்தியது. இது வரை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கே பரிசோதனைகளை நடத்தியதாக அரசு கூறுகிறது.
இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-
1812 - லண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் ஸ்பென்சர் பேர்சிவல் ஜோன் பெல்லிங்ஹம் என்பவனால் கொல்லப்பட்டார். * 1857 - இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர். * 1867 - லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது. * 1891 - ஜப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார். * 1905 - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் பிரௌனியன் இயக்கம் பற்றிய தனது விளக்கத்தை வெளியிட்டார்.
* 1924 - மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்டது. * 1943 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் அலூசியன் தீவுகளின் அட்டு தீவைக் கைப்பற்றினர். * 1949 - சியாம் நாடு தாய்லாந்து எனப்பெயர் மாற்றம் பெற்றது. * 1949 - ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேல் இணைந்தது * 1953 - டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர். * 1960 - முதலாவது கருத்தடை மாத்திரை அறிமுகமானது.
* 1985 - இங்கிலாந்தில் கால்பந்து போட்டியொன்றில் அரங்கில் இடம்பெற்ற தீயினால் 56 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர். * 1987 - முதலாவது இதய மாற்றுச் சத்திர சிகிச்சை மேரிலாந்தில் நடத்தப்பட்டது. *1997 - ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.