search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேசியோ ஜி-ஷாக் ஏவியேஷன் கான்செப்ட் வெளியானது
    X

    கேசியோ ஜி-ஷாக் ஏவியேஷன் கான்செப்ட் வெளியானது

    கேசியோ இந்தியா நிறுவனம் தனது ஏவியேஷன் கான்செப்ட் கிராவிட்டிமாஸ்டர் சீரிஸ் புதிய வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #GShock



    கேசியோ இந்தியா நிறுவனம் தனது ஏவியேஷன் கான்செப்ட் ஆன கிராவிட்டி மாஸ்டர் சீரிசில் புதிய ஷாக்-ரெசிஸ்டன்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. ஜி.ஆர்.-பி100 வாட்ச் ஸ்மார்ட்போன் செயலியுடன் ப்ளூடூத் மூலம் இணைந்து கொண்டு நேரம் மற்றும் அம்சங்களை வழங்குகிறது.

    புதிய ஜி.ஆர்.-பி100 வாட்ச்சில் கவுன்ட் டவுன் அலாரம் எனும் புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதிக்கு கவுன்ட் டவுன் வழங்கும். ஒவ்வொரு நிகழ்வுக்குமான கவுன்ட் டவுன் வாட்ச்சில் உள்ள நொடிகளுக்கு கீழ் தெரியும். இத்துடன் ஃபிளைட் லாக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த அம்சம் கொண்டு லொகேஷன் விவரம் மற்றும் நேரத்தை பதிவு செய்ய முடியும். இதனால் செயலியில் இருந்தபடியே மேப் மூலம் வழிகளை பார்க்க முடியும். வாட்ச்சின் ஃபேஸ் டிசைன் விமானத்தின் காக்பிட் இன்டிகேட்டர்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. மணி மற்றும் நொடிகள், இன்டெக்ஸ் மார்க் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள விவரங்களை வழங்குகிறது. 

    வாட்ச் ஃபேசில் பெரிய, ஹெச்.டி. எல்.சி.டி. வழங்கப்பட்டு இருப்பதால், எழுத்து மற்றும் எண்களை தெளிவாக பார்க்க முடியும். வாட்ச் செட்டிங்களில் உலக நேரம் மற்றும் அலாரம் உள்ளிட்டவற்றை செயலியில் இருந்தே இயக்க முடியும். வாட்ச்சில் உள்ள ஆறு பட்டன்கள் வெவ்வேறு அம்சங்களை வழங்குகிறது.
    Next Story
    ×