search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தமிழ் நாட்டில் யமஹா மியூசிக் உற்பத்தி மையம்
    X

    தமிழ் நாட்டில் யமஹா மியூசிக் உற்பத்தி மையம்

    யமஹா மியூசிக் நிறுவனத்தின் இசைக் கருவிகள் விரைவில் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. #YAMAHA



    இசைக் கருவிகளை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் யமஹா மியூசிக் அகௌஸ்டிக் கிட்டார்கள் மற்றும் போர்டபிள் கீபோர்டுகளை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் தமிழ் நாட்டில் உற்பத்தி செய்ய இருக்கிறது. அந்த வகையில் ஆண்டு முழுக்க நடைபெறும் உற்பத்தியில் இருந்து சுமார் 20-30 சதவிகித கருவிகளை ஏற்றுமதி செய்ய யமஹா மியூசிக் திட்டமிட்டுள்ளது.

    வரும் ஆண்டுகளில் யமஹா மியூசிக் இந்தியா நிறுவனம் 4,00,000 அகௌஸ்டிக் கிட்டார்கள், 3,00,000 போர்டபிள் கீபோர்டு உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்ய இருக்கிறது.

    யமஹா மியூசிக் இந்தியா மொத்தம் 72 கோடி சிங்கப்பூர் டாலர்கள் முதலீட்டில் கட்டமைக்கும் தயாரிப்பு ஆலையில் 4,00,000 அகௌஸ்டிக் கிட்டார்கள் மற்றும் 3,00,000 போர்டபிள் கீபோர்டுகளை உற்பத்தி செய்யப்பட இருப்பதாக யமஹா மியூசிக் இந்தியா நிர்வாக இயக்குனர் தகாஷி ஹாகா தெரிவித்தார். 

    சென்னையில் உருவாக இருக்கும் உற்பத்தி ஆலையில் முதற்கட்டமாக 38 கோடி சிங்கப்பூர் டாலர்களை யமஹா மியூசிக் இந்தியா முதலீடு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முதற்கட்ட கட்டுமான பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டது. இதன் உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் துவங்க இருக்கிறது.

    தமிழ் நாட்டில் உற்பத்தியாக இருக்கும் இசைக்கருவிகள் இந்திய வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் முதல் ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் கருவிகளில் 20-30 சதவிகிதம் மட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×