
புதுடெல்லி:
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்ட் இந்தியாவில் ஹானர் பேண்ட் A2 சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட பேண்ட் A2 0.96 இன்ச் OLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் வசதியும் வழங்கப்பட்டிருப்பதால் பேண்ட் வழங்கும் தகவல்களை கொண்டு உறக்கத்தை மேம்படுத்த முடியும். இத்துடன் ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை நோட்டிபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும்.
ஹானர் பேண்ட் A2 வியர்வை மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டிருப்பதோடு 9 நாட்கள் பேட்டரி வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் பேண்ட் A2 சிறப்பம்சங்கள்:
- 0.96 இன்ச் OLED டச் டிஸ்ப்ளே
- ப்ளூடூத் 4.2
- ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஓ.எஸ். 8.0
- பீடோமீட்டர், ஸ்லீப் டிராக்கர், உடற்பயிற்சி டிராக்கர், செடன்ட்ரி ரிமைன்டர்
- அழைப்புகள் மற்றும் குறுந்தகவல் நோட்டிபிகேஷன்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
- 95 எம்.ஏ.எச். பேட்டரி
இந்தியாவில் ஹானர் பேண்ட் A2 கருப்பு நிறத்தில் கிடைப்பதோடு அமேசான் வலைத்தளத்தில் ஜனவரி 8-ம் தேதி முதல் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் பேண்ட் A2 விலை ரூ.2799 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.