search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி
    X

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 அறிமுக தேதி

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகும் தகவல்களின் படி சாம்சங் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இரு மாதங்களில் வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகின. இதுதவிர சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை ஜூலை மாதத்தில் மீண்டும் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதற்கென சாம்சங் தனி நிகழ்வுக்கு ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது.



    கடந்த ஆண்டு கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, ஆகஸ்டு 24 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு இதன் விற்பனை ஆகஸ்டு 25 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. 

    இம்முறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் ப்ரோ வேரியண்ட் பட்டன்கள் நீக்கப்பட்டு பிரெஷர் சென்சிட்டிவ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என தெரிகிறது. கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் இரு வேரியண்ட்களிலும் பிக்ஸ்பி பட்டன் நீக்கப்படும் என கூறப்படுகிறது.



    புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் துவக்க விலை 1100 டாலர்கள் முதல் 1200 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.76,000-ரூ.83,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

    இதுதவிர வெளியாகி இருக்கும் மற்றொரு தகவலில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. இதற்கான நிகழ்வு இந்த மாதம் நடைபெற்று ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலையில் துவங்கும் என தெரிகிறது.



    முன்னதாக கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டது. பின் ஸ்மார்ட்போனில் பிழை இருப்பது உறுதி செய்யப்பட்டு, வெளியீடு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. பின் ஸ்மார்ட்போனிற்கு சாம்சங் பெற்ற முன்பதிவு தொகையையும் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கியது.

    புகைப்படம் நன்றி: 91mobiles/onleaks
    Next Story
    ×