search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன் - அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு
    X

    விரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன் - அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது.



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. டீசர் வீடியோவில் கேமரா மட்டும் தோன்றுகிறது. இந்த டீசர் நோக்கியா மொபைல் இந்தியா மற்றும் நோக்கியா குளோபல் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது.



    அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் இத்தாலி மற்றும் இந்தியாவில் ஒரே நாளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் TA-1183 எனும் மாடல் நம்பர் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் FCC மற்றும் BIS சான்றிதழ்களை பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இது நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் என்றும் இது நோக்கியா வாஸ்ப் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது. இது ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதுதவிர ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 9 பியூர் வியூ, நோக்கியா 1 பிளஸ் மற்றும் நோக்கியா 210 ஃபீச்சர் போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வகையில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களையும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
    Next Story
    ×