search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலி - தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் டிக்டாக்
    X

    ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலி - தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் டிக்டாக்

    ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.



    வீடியோ பகிர்ந்து கொள்ளும் டிக்டாக் செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2019 ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஆப் ஸ்டோரில் உலகம் முழுக்க அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் டிக்டாக் முதலிடத்தில் இருக்கிறது.

    சென்சார்டவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி 2019 முதல் காலாண்டில் மட்டும் ஆப் ஸ்டோரில் இருந்து சுமார் 3.3 கோடி பேர் டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர ஆப் ஸ்டோரில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடம் பிடித்துள்ளது.



    இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ட்விட்டர் 16 ஆவது இடத்தில் இருக்கிறது. டிக்டாக் செயலியை இன்ஸ்டால் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.

    கடந்த ஒரு காலாண்டில் மட்டும் டிக்டாக் செயலியை சுமார் 88.6 கோடி பேர் டவுன்லோடு செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 8.2 மடங்கு அதிகம் ஆகும். இவற்றில் 99 சதவிகித டவுன்லோடுகள் ஆண்ட்ராய்டு தளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    Next Story
    ×