search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன புதிய சியோமி சாதனம்
    X

    இணையத்தில் லீக் ஆன புதிய சியோமி சாதனம்

    சியோமி நிறுவனத்தின் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.



    அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தையில் சியோமி நிறுவனத்தின் Mi பேண்ட் வெற்றிகரமான சாதனமாக இருக்கிறது. அந்த வகையில் சியோமியின் புதிய Mi பேண்ட் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய Mi பேண்ட் கலர் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    புதிய சாதனம் Mi பேண்ட் 4 என அழைக்கப்படலாம் என்றும் இதில் டிஜிட்டல் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இணையத்தில் லீக் ஆன விவரங்களின் படி Mi பேண்ட் 4 சாதனத்தில் சியோ ஏ.ஐ. விர்ச்சுவல் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    சியோமி நிறுவனம் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. தாய்வான் நாட்டின் என்.சி.சி. தளத்தில் Mi பேண்ட் 4 சாதனத்தின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. கூகுள் அசிஸ்டண்ட் போன்று சியோ ஏ.ஐ. கொண்டு வானிலை, ஸ்மார்ட் சாதனங்களை இயக்குவது மற்றும் மொழி பெயர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ளலாம்.


    புகைப்படம் நன்றி: SlashLeaks

    இத்துடன் புதிய சாதனத்தில் பட்டன் நீக்கப்பட்டு Mi பேண்ட் 4 கேபாசிட்டிவ் கண்ட்ரோல் கொண்டிருக்கும் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களின் படி சியோமி Mi பேண்ட் 4 மாடலில் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி, இதய துடிப்பு சென்சார், பி.பி.ஜி. மாணிட்டர் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    என்.எஃப்.சி. மூலம் மொபைல் பேமண்ட் செய்யும் வசதி கொண்ட மாடலை சியோமி அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்த சாதனம் சீனாவில் மட்டும் விற்பனைக்கு வரலாம் என கூறப்படுகிறது. புதிய Mi பேண்ட் 4 பற்றி இதுவரை அதிகளவு தகவல்கள் வெளியாகவில்லை.

    புதிய Mi பேண்ட் 4 சியோமியின் ரஃபேல், டாவின்சி மற்றும் பைக்சிஸ் குறியீட்டு பெயர்களை கொண்டு உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் 2019 நான்காவது காலாண்டில் அணியக்கூடிய சாதனங்களுக்கான சந்தை வளர்ச்சி பெற்றிருப்பதாக ஐ.டி.சி. தெரிவித்தது.
    Next Story
    ×