search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்
    X

    6 ஜி.பி. ரேமுடன் உருவாகும் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்

    ஹெச்.டி.சி. நிறுவனம் புதிதாக என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாகவும் இதில் 6 ஜி.பி. ரேம் வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. #HTC



    ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பெருமை தாய்வானை சேர்ந்த ஹெச்.டி.சி. நிறுவனத்தை சேரும். கடந்த காலக்கட்டங்களில் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் வித்தியாசமான அம்சங்களை வழங்கிய ஹெச்.டி.சி. சமீப காலங்களில் சீன நிறுவனங்களால் சரிவை சந்தித்து வருகிறது. 

    சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் வழங்கும் மலிவு விலை ஸ்மார்ட்போன்களை ஹெச்.டி.சி. வழங்க தவறியதே அதன் சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கீக்பென்ச் தளத்தில் இருந்து கிடைத்திருக்கும் புதிய தகவல்களில் ஹெச்.டி.சி. என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    பெயரிடப்படாத ஹெச்.டி.சி. ஸ்மார்ட்போன் HTC 2Q741 என்ற மாடல் நம்பருடன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்றிருக்கிறது. கீக்பென்ச் தளத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் கோரில் 897 புள்ளிகளையும், மல்டி-கோரில் 4385 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதன் படி இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஆக்டாகோர் சிப்செட் மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    பென்ச்மார்க் தளத்தின் படி ஸ்மார்ட்போனில் என்ட்ரி-லெவல் பிராசஸர் மற்றும் 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் கஸ்டம் ஸ்கின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர ஹெச்.டி.சி. நிறுவனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட மற்றொரு ஸ்மார்ட்போனையும் உருவாக்கி வருகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் HTC 2Q7A100 என்ற மாடல் நம்பருடன் உருவாகி வருகிறது. தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் குவால்காம் வேரியண்ட்டையும், மற்ற நாடுகளில் மீடியாடெக் வேரியண்ட் ஸ்மார்ட்போனை ஹெச்.டி.சி. அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஹெச்.டி.சி. புதிய ஸ்மார்ட்போன் விலை கணிசமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×