search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டூயல் கேமராவுடன் அசத்தும் நோக்கியா ஸ்மார்ட்போன் டீசர்
    X

    டூயல் கேமராவுடன் அசத்தும் நோக்கியா ஸ்மார்ட்போன் டீசர்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. #Nokia



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 4.2 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ஸ்மார்ட்போனிற்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் டீசரில் எல்.இ.டி. நோட்டிஃபிகேஷன் லைட் பவர் பட்டனில் பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.



    நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

    - 5.71 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. / 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை
    - 13 எம்.பி. பிரமரி கேமரா, F2.2/1.12µm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா, F2.0, 1.12µm பிக்சல்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, வோல்ட்இ, ப்ளூடூத்

    சர்வதேச சந்தையில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சிக்னேச்சர் சேண்ட் பின்க் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனுடன் நோக்கியா 3.2 அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதன் விலை மற்ற மாடல்களுக்கு சவால் விடும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×