search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மஞ்சள் நிற பவர் பட்டனுடன் இணையத்தில் லீக் ஆன பிக்சல் ஸ்மார்ட்போன்
    X

    மஞ்சள் நிற பவர் பட்டனுடன் இணையத்தில் லீக் ஆன பிக்சல் ஸ்மார்ட்போன்

    கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் புதிய புகைப்படம் லீக் ஆகியுள்ளது. #Google



    கூகுள் நிறுவனத்தின் பிகசல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. இவற்றில் ஸ்மார்ட்போனின் ரென்டர்களிலேயே இதன் தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியாகின. 

    இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் புதிய ஸ்மார்ட்போன் மே 7 ஆம் தேதி அறிமுகமாகலாம் என்ற வாக்கில் புதிய டீசர்களை வெளியிட்டது. இந்நிலையில், பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் பர்ப்பிள் நிற வேரியண்ட் அதிகாரப்பூர்வ ரென்டர் புகைப்படங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

    ட்விட்டரில் வெளியாகியிருக்கும் புதிய புகைப்படஙகளில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் பர்ப்பிள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டிருக்கிறது. பின்புறம் கீழ்பக்கம் ஜி லோகோ போனின் மற்ற பகுதிகளை விட அதிக தெளிவாக காட்சியளிக்கிறது. இதன் கீழ் இருக்கும் பகுதிகளில் மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளது.



    வழக்கமாக கூகுள் தனது ஸ்மார்ட்போன்களுக்கு நாட் பின்க் மற்றும் கின்டா புளு என வித்தியாச நிறங்களின் பெயர்களை சூட்டி வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான தகவல்களில் ஒரு வேரியண்ட் ஐரிஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது.

    இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் இதில் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×