search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்
    X

    ஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்

    ட்விட்டரில் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், ட்விட்டர் சி.இ.ஒ.-வை அழைத்து டோஸ் விட்டார் டொனால்டு டிரம்ப். #DonaldTrump



    ட்விட்டரில் தனது ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அதிருப்தியடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் சமூக வலைதளத்தின் போக்கு பற்றி டிரம்ப் சாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    "வெள்ளை மாளிகையில் ட்விட்டரில் இருந்து ஜாக் டார்சியை சந்தித்தேன். எங்களுக்குள் ட்விட்டர் தளம் மற்றும் சமூக வலைதள உலகம் பற்றி பொதுவான உரையாடல் அரங்கேறியது." என டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இத்துடன் ஜாக் டார்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். 



    இதற்கு முன் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்திக்காத ஜாக் டார்சி, அதிபர் டிரம்ப்பின் ட்வீட்டிற்கு பதில் அளித்தார். அதில் "தங்களது நேரத்திற்கு நன்றி. பொதுப்படையான கருத்து பரிமாற்றங்களுக்காகவே ட்விட்டர் இயங்குகிறது. அந்த வகையில் தளத்தை ஆரோக்கியமாகவும், அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதாக மாற்றவே விரும்புகிறோம். இதுபற்றிய உரையாடலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார். 



    மேலும் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்தது பற்றி கவலை தெரிவித்த டிரம்ப்பிற்கு டார்சி பதில் அளித்துள்ளார். அதில், போலி மற்றும் தீங்கு விளைவிக்கும் அக்கவுண்ட்களை நீக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதன் காரணமாக எனது ஃபாலோவர்களும் குறைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    முன்னதாக ட்விட்டர் தனக்கு பாரபட்சம் காட்டுகிறது, இதனால் எனது ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சிகள் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை பயன்படுத்திய விவகாரம் வெளியானதும், ட்விட்டர் சந்தேகத்திற்குரிய அக்கவுண்ட்களை நீக்கும் பணிகளை துவங்கியது.

    இந்நிலையில், கீஹோல் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டொனால்டு டிரம்ப் சுமார் 2,04,000 ஃபாலோவர்களை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×