search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    விரைவில் அறிமுகமாகும் ஒப்போ அவெஞ்சர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் அறிமுகமாகும் ஒப்போ அவெஞ்சர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன்

    ஒப்போ நிறுவனத்தின் எஃப்11 ப்ரோ அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #OPPO



    ஒப்போ நிறுவனம் தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. தற்சமயம் ஒப்போ தனது எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போனின் அவெஞ்சர்ஸ் லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 24 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனில் புளு மற்றும் ரெட் நிற அவெஞ்சர்ஸ் லோகோ இடம்பெற்றிருக்கிறது. இதில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. ஒப்போ எஃப்11 ப்ரோ ஸ்டான்டர்டு எடிஷனில் 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அவெஞ்ர்ஸ் லோகோ தவிர புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    அந்த வகையில் ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD பிளஸ் பானாரோமிக் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, அல்ட்ரா நைட் மோட், டேசிள் கலர் மோட் மற்றும் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. என்ஜின், அல்ட்ரா-க்ளியர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 3D கிரேடியன்ட் பேக், தண்டர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. புதிய ஒப்போ எஃப் 11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000 எம்.ஏ.ஹச். பேட்டரி மற்றும் VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×