search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.
    X

    சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் எல்.ஜி.

    எல்.ஜி. நிறுவனம் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. #LG



    ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை வெளியிடாத நிறுவனங்களில் எல்.ஜி.யும் ஒன்றாக இருக்கிறது. எனினும், இந்நிறுவனம் பத்து காப்புரிமைகளை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் எல்.ஜி. பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி எல்.ஜி. மடிக்கக்கூடிய சாதனங்களுக்கு பதில் சுருங்கக்கூடிய சாதனங்களை உருவாக்க இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களும் அடங்கும்.

    காப்புரிமைகளில் தி ரோல், பை-ரோல், டபுள் ரோல், டூயல் ரோல், ரோல் கேன்வாஸ் மற்றும் இ-ரோல் உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதிகப்படியான காப்புரிமைகளில் ரோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை தவிர மற்ற விண்ணப்பங்களில் சிக்னேச்சர் ஆர், ஆர் ஸ்கிரீன், ஆர் கேன்வாஸ், ரோடோலோ போன்ற பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.



    காப்புரிமை விவரங்களை கொண்டு இந்த சாதனங்கள் உடனே வெளியாகும் என கூறிவிட முடியாது. எனினும், இந்த சாதனங்கள் ஆய்வு அல்லது உருவாக்கப்படலாம் என தெரிகிறது. சமீபத்தில் வெளியான மற்றொரு காப்புரிமை விவரங்களில் எல்.ஜி. ஸ்மார்ட்போன் சுருங்கக்கூடிய தன்மை கொண்டிருக்கும் என கூறப்பட்டது.

    எல்.ஜி. பதிவு செய்திருந்த மற்றொரு காப்புரிமையில், வளையும் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் மெல்லிய பெசல்கள் வழங்கப்படும் என காப்புரிமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்புரிமை கொரிய காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு அக்டோபர் 23, 2018இல் காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. 

    புகைப்படம் நன்றி: LetsGoDigital
    Next Story
    ×