search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyA90



    சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சாம்சங் சமீபத்தில் தனது கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தற்போதைய டிரெண்டிங் அம்சங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது.

    அந்த வரிசையில் தற்சமயம் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியிருக்கிறது. அதன்படி கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் TOF ரக கேமரா மற்றும் 25 வாட் பி.டி. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போனில் பிரத்யேக ஸ்லைடு-அவுட் ரக வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இவற்றில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.



    இந்த தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமராவை சுழற்றி செல்ஃபி கேமரா போன்று பயன்படுத்த முடியும் என தெரிகிறது. ரெசல்யூஷனை பொருத்தவரை கேலக்ஸி ஏ90 மாடலில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0, 8 எம்.பி. கேமரா, f/2.4 மற்றும் TOF கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது. 

    சுழற்றக்கூடிய கேமரா அமைப்பின் மூலம் புதிய ஸ்மார்ட்போனில் பெசல், நாட்ச் மற்றும் ஹோல் பன்ச் உள்ளிட்டவற்றை நீக்கி புதிய வகை இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்க முடியும். டிஸ்ப்ளேவை பொருத்தவரை புதிய கேல்கஸி ஏ90 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7150 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் ரேம் மற்றும் மெமரி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த ஸ்மார்ட்போன் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 25 வாட் பி.டி. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.

    சாம்சங் கேலக்ஸி ஏ90 கான்செப்ட் வீடியோவை கீழே காணலாம்..,


    நன்றி: WaqarKhan
    Next Story
    ×