search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்
    X

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்

    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Redmi



    ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டு உருவாகும் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. அதில் புதிய ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் பாப்-அப் ரக கேமரா வழங்கப்படுவதும், சிவப்பு நிறம் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரெட்மி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்குவதை சியோமி உறுதி செய்திருந்தது. எனினும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

    ரெட்மி தலைவர் லு வெய்பிங் ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாகவும், இதில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் போது அதில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா மற்றும் ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.



    இவை தவிர ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்றும் இது சிவப்பு நிறத்தை தழுவி இருக்கும் என தெரிகிறது. முன்புறம் பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் ஆன்டெனா பேண்ட்களும் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் மூன்று பிரைமரி கேமராக்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    முன்னதாக ரெட்மி 2 ப்ரோ என்ற பெயரில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி இருந்தது. இதில் பாப்-அப் செல்ஃபி கேமரா மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது. இரு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பை பார்க்கும் போது இவற்றின் பாப்-அப் செல்ஃபி கேமரா வித்தியாசமாக பொருத்தப்பட்டிருப்பது தெரிகிறது. 

    இதனால் எந்த ஸ்மார்ட்போனினை ரெட்மி உருவாக்கி வருகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Weibo- Alvin
    Next Story
    ×