search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அலெக்சா வசதியுடன் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் செய்யும் அமேசான்
    X

    அலெக்சா வசதியுடன் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் செய்யும் அமேசான்

    அமேசான் நிறுவனம் அலெக்சா வசதியுடன் கூடிய வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Amazon



    அமேசான் நிறுவனம் சொந்தமாக வயர்லெஸ் இயர்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆப்பிளின் ஏர்பாட்ஸ் இயர்போன்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. இது அமேசான் லேப் 126 ஹார்டுவேர் பிரிவின் மிகமுக்கிய திட்டமாக இருக்கலாம் என தெரிகிறது. 

    அமேசான் தனது வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான அலெக்சாவை பல்வேறு எக்கோ சாதனங்களில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்சமயம் வயர்லெஸ் இயர்போன்களிலும் அலெக்சா சேவையை புகுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலெக்சா வசதி கொண்ட வயர்லெஸ் இயர்போன் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகமாகலாம்.



    தோற்றத்தில் அமேசானின் இயர்போன்கள் பார்க்க ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்றே காட்சியளிக்கும் என்றும் இதில் சிறப்பான ஆடியோ தரத்தை புகுத்த அதன் பொறியாளர்கள் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் இயர்பட்ஸ் கொண்டு பயனர்கள் இசையை கேட்பது, பொருட்களை வாங்குவது, வானிலை விவரங்களை அறிந்து கொள்வது என பலவற்றை மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் இசையை கேட்கும் போது அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது போன்றவற்றை இயர்பட்களை தட்டியே செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இயர்போன்களில் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை இயக்க அலெக்சா என கூறினாலே போதுமானது என்றும் இது ஸ்மார்ட்போனுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது.

    அமேசான் இயர்போன்களுடன் ஸ்டோரேஜ் கேஸ் ஒன்று வழங்கப்படும் என்றும் இதுவே இயர்போன்களை சார்ஜ் செய்யும் சார்ஜர் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. பயனர்கள் இதனை வழக்கமான யு.எஸ்.பி. கேபிள் கொண்டே சார்ஜ் செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×