search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மூன்று வாரங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையான ரியல்மி ஸ்மார்ட்போன்
    X

    மூன்று வாரங்களில் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையான ரியல்மி ஸ்மார்ட்போன்

    ரியல்மி பிராண்டு சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய மூன்று வாரங்களில் சுமார் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. #Realme3



    ரியல்மி பிராண்டு தனது ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த சில நாட்களில் நடைபெற்ற முதல் விற்பனையில் மட்டும் சுமார் 2.1 லட்சம் ரியல்மி 3 யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி அறிவித்திருந்தது. இதன்பின் முதல் இருவாரங்களில் சுமார் 3.1 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டதாக ரியல்மி அறிவித்தது.



    இந்நிலையில் விற்பனை துவங்கி மூன்று வாரங்களில் சுமார் ஐந்து லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது. ரியல்மி 3 ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் ரியல்மி 3 ஸ்மார்ட்போனிற்கு 4.5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி வருவதாக ரியல்மி தெரிவித்திருக்கிறது.



    முன்னதாக ரியல்மி பிராண்டு தனது ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்தது. விலை குறைப்பின் படி ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் துவக்க விலை ரூ.9,999 என மாறியிருக்கிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் விலை பிப்ரவரி மாதத்திலும் குறைக்கப்பட்டது. 

    அந்த வகையில் ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்சமயம் வரை மொத்தம் ரூ.2,000 விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 
    Next Story
    ×