search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பாப் அப் கேமராவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
    X

    பாப் அப் கேமராவுடன் உருவாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #OnePlus7



    சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் தங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஒன்பிளஸ் ஃபிளாக்‌ஷிப் மாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    சீன நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், இதன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் 7 விவரங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ஒன்பிளஸ் இந்த ஆண்டு மூன்று ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் 7, 5ஜி வேரியண்ட் மற்றும் ஒன்பிளஸ் 7டி என மூன்று மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒன்பிளஸ் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 6டி மாடலில் சிறிய ரக நாட்ச் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முற்றிலும் நாட்ச் இல்லா வடிவமைப்பை வழங்க ஒன்பிளஸ் முடிவு செய்திருக்கிறது.



    ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்க ஏதுவாக ஒன்பிளஸ் நிறுவனம் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்குகிறது. இதேபோன்ற தொழில்நுட்பத்தை விவோ நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த நெக்ஸ் ஸ்மார்ட்போனில் வழங்கியது. இந்த வடிவமைப்பின் மூலம் 100 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்க முடியும். ஒன்பிளஸ் 7 மாடலில் அந்நிறுவனம் 90 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்கலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 20 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்.பி. டெப்த் கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

    முந்தைய ஒன்பிளஸ் 6டி மாடலில் வழங்கப்பட்டதை போன்று புதிய ஒன்பிளஸ் 7 மாடலிலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் 3டி சோனிக் சென்சார் வழங்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Waqar Khan/YouTube
    Next Story
    ×