search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    தவறுதலாக மார்க் சூக்கர்பர்க் போஸ்ட்களையே அழித்த ஃபேஸ்புக்
    X

    தவறுதலாக மார்க் சூக்கர்பர்க் போஸ்ட்களையே அழித்த ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க்கின் பழைய பதிவுகளை ஃபேஸ்புக் தவறுதலாக அழித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook
    ஃபேஸ்புக் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க்கின் பழைய பதிவுகளை ஃபேஸ்புக்கில் இருந்து தவறுதலாக நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. இந்த பதிவுகளை மார்க் சூக்கர்பர்க் 2007 மற்றும் 2008 ஆண்டுகளில் பதிவிட்டவை ஆகும்.

    மார்க் சூக்கர்பர்க்கின் பழைய பதிவுகளை இன்றும் ஃபேஸ்புக் வலைதளம் அல்லது நியூஸ்ரூம் பக்கங்களில் பார்க்க முடியும் என ஃபேஸ்புக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன் மார்க் சூக்கர்பர்க்கின் பதிவுகள் தொழில்நுட்ப பிழை காரணமாக தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது. பின் அவற்றை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்கவில்லை என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



    எத்தனை பதிவுகள் அழிக்கப்பட்டன என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். எனினும், மாயமான பதிவுகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. பதிவுகள் மாயமாக காரணமான பிழை எத்தனை பதிவுகள் மாயமானது என்பதை கண்டறியும் வழிமுறை மிகவும் கடினமாக்கியிருக்கிறது.

    பதிவுகள் மாயமாகி இருப்பது மற்றும் இவற்றை ஃபேஸ்புக் சேமிக்கும் முறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், பழைய பதிவுகளை இயக்க கடினமாக்கியிருக்கிறது. இந்த குற்றுச்சாட்டுகளுக்கு ஃபேஸ்புக் மற்றும் மார்க் சூக்கர்பர்க் தான் பதில் அளிக்க வேண்டும்.

    முன்னதாக பயனர் தகவல்களை ஃபேஸ்புக் பாதுகாக்கும் விதம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் நியூசிலாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் ஃபேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது. அந்நிறுவனம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் நீண்ட நேரம் பரவி விட்டதற்கு உலகம் முழுக்க எதிர்ப்புக்குரல் எழுந்தது. #Facebook
    Next Story
    ×