search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இையத்தில் லீக் ஆகியுள்ளது. #NokiaX71



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏப்ரல் 2 ஆம் தேதி தாய்வானில் நிகழ்சிக்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிகழ்வில் அந்நிறுவனம் புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 8.1 பிளஸ் மாடலுடன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.  இதுதவிர புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா 6 (2019) மாடலாக இருக்கும் என்றும் தகவல் வெளியானது. 

    இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கிறது. பென்ச்மார்க் தளத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் சோகனையில் 1455 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 5075 புள்ளிகளை பெற்றிருக்கிறது. 



    முன்னதாக நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் சீனாவில் கிளியரன்ஸ் சான்று பெற்றிருந்தது. பென்ச்மார்க் தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய நோக்கியா எக்ஸ்71 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    கடந்த ஆண்டு வெளியான நோக்கியா 6.1 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் வழங்கப்பட்டிருந்தது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனி்ல் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற நோக்கியா ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய மாடலிலும் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் தற்சமயம் 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.  

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா மாட்யூல் வழங்கப்படும் என்றும் இதில் ஒன்று 48 எம்.பி. சென்சாராக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: OnLeaks | 91mobiles
    Next Story
    ×