search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ட்விட்டரில் இதை முயற்சிக்க வேண்டாம்
    X

    ட்விட்டரில் இதை முயற்சிக்க வேண்டாம்

    ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் இந்த புதிய வழிமுறை பயனர்களை அவர்களது அக்கவுண்ட்களில் இருந்து லாக் அவுட் செய்கிறது. #Twitter



    ட்விட்டரில் வைரலாகி வரும் புதிய பிழை பயனர்களை அவர்களது அக்கவுண்ட்களில் இருந்து லாக்-அவுட் செய்கிறது. இந்த பிழை பயனர்களிடம் அவர்களது பிறந்த தேதியை 2007 ஆம் ஆண்டு மாற்றக் கோருகிறது. இவ்வாறு செய்யும் போது அவர்களின் ஃபீட் புதிய நிறங்களில் வித்தியசமாக மாறும் என தகவல் பரவி வருகிறது.

    இதை நம்பி பிறந்த தேதியை மாற்றுவோர் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்தே லாக்-அவுட் செய்யப்படுகின்றனர். ட்விட்டர் பயன்படுத்துவோர் நிச்சயம் 13 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் 2019 ஆம் ஆண்டில் இருக்கிறோம். இதனால் பிறந்த வருடத்தை 2007 என மாற்றும் போது பயனர் வயது 12 ஆகவே இருக்கும்.

    ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டாம் என பயனர்களுக்கு ட்விட்டர் வலியுறுத்தி வருகிறது. இதனை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. ஒருவேளை ஏற்கனவே இந்த வழிமுறையை பின்பற்றியவர்களுக்கு ட்விட்டர் சார்பில் அனுப்பப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற ட்விட்டர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. 



    ட்விட்டர் கூறியபடி வழிமுறைகளை பின்பற்றினால் மீண்டும் ட்விட்டர் பயன்படுத்த முடியும். எனினும், இந்த வழிமுறையின் போது பயனர் தங்களின் வயதை நிரூபிக்க வேண்டும். பயனர்கள் ட்விட்டர் சப்போர்ட்டை தொடர்பு கொண்டு அவர்களது வயதை நிரூபிக்கும் அடையாள சான்றின் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும்.
    Next Story
    ×