search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு சேவை அறிமுகம்
    X

    ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு சேவை அறிமுகம்

    ஆப்பிள் நிறுவனம் தனது சொந்த கிரெடிட் கார்டு சேவையை அறிமுகம் செய்துள்ளது. #AppleEvent #AppleSpecialEvent



    ஆப்பிள் நிறுவனத்தின் கிரெடிட் கார்டு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் கார்டு என அழைக்கப்படும் புதிய கிரெடிட் கார்டினை ஆப்பிள் பே பயன்படும் அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தலாம்.

    ஆப்பிள் கார்டு கொண்டு நீங்கள் செய்த செலவினங்களை மிகத்துல்லியமாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியலிடப்படுகிறது. ஆப்பிள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவதால், பயனர் எங்கு செலவு செய்தனர் என்ற விவரங்களை பின்னர் பார்க்க முடியும்.



    பொதுவாக கிரெடிட் கார்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் கிரெடிட் கார்டு செலவினங்கள் பட்டியலில் பொருட்களை விற்பனை செய்தவர்களின் விவரம் தெளிவற்றதாகவோ, எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருப்பதற்கு இது முற்றிலும் மாற்றாக இருக்கும். 

    பயனர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஆப்பிள் கார்டு கொண்டு பயனர் வாங்கும் பொருட்கள் மற்றும் அவற்றை எங்கு வாங்கினர் என்ற விவரங்கள் எதுவும் சேகரிக்கப்படாது. இந்த கார்டு ஆப்பிள் ஐபோனின் வாலெட் பகுதியில் விவரங்களை சேகரித்து வைக்கும்.



    ஆப்பிள் கார்டு டைட்டானியம் மூலம் உருவாக்கப்படுகிறது. எனினும் இதில் வழக்கமான கார்டுகளில் இருப்பதை போன்ற கிரெடிட் கார்டு நம்பர், சி.வி.வி. எண் உள்ளிட்ட எதுவும் இடம்பெற்றிருக்காது. இந்த விவரங்களும் ஐபோனின் வாலெட் பகுதியில் இடம்பெற்றிருக்கும்.

    இதுதவிர ஆப்பிள் கார்டு கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்டு சந்தா செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலோ, கட்டணம் தாமதமாக செலுத்தினாலோ எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×