search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை துவக்கம்
    X

    ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை துவக்கம்

    உலகின் பல்வேறு பிரபல பத்திரிகைகளை வாசிக்கும் வசதியுடன் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. #AppleEvent #AppleSpecialEvent

     

    ஆப்பிள் நிறுவனம் புதிய செய்தி சேவையை துவங்கியிருக்கிறது. ஆப்பிள் நியூஸ் பிளஸ் என அழைக்கப்படும் புதிய சேவையில் 300க்கும் அதிகமான பத்திரிகைகளை வாசிக்க முடியும்.

    ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவைக்கான கட்டணம் மாதம் 9.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையில் உலகின் பிரபல பத்திரிகைகளை டிஜிட்டல் முறையில் வாசிக்கும் வசதி வழங்கப்படுகிறது. 



    நம் வாழ்க்கையில் ஊடகத்தின் சக்தி மற்றும் இது மேற்கொள்ளும் மாற்றத்தின் மீது எங்களுக்கு அதிகளவு நம்பிக்கை இருக்கிறது என ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்தார். அந்த வகையில் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வாடிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்கனவே கிடைக்கிறது. இரு நாடுகளை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நியூஸ் பிளஸ் சேவை வழங்கப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

    பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் விளம்பரதாரர்களால் பயனர் நடவடிக்கைகளை டிராக் செய்ய முடியாது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×