search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம்
    X

    நாடாளுமன்ற தேர்தலையொட்டி ட்விட்டரில் இணைந்த தேர்தல் ஆணையம்

    இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இணைந்திருக்கிறது. #LokSabhaElections2019 #ElectionCommission



    மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் கணக்கு துவங்கியிருக்கிறது. இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் துவங்க இருப்பதையொட்டி ட்விட்டர் சார்பில் சிறப்பு தேர்தல் எமோஜி (பாராளுமன்ற கட்டிடம்) ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

    புதிய தேர்தல் எமோஜியை கொண்டு தேர்தல் தொடர்பான விவாதங்கள், பொது மக்களிடத்தில் வாக்கு செலுத்துவதை ஆதரிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஊக்கப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. 12 மொழிகளில் கிடைக்கும் ஹேஷ்டேக்களில் இந்த தேர்தல் எமோஜி இணைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு (Systematic Voters' Education and Electoral Participation) எனும் திட்டத்தை துவங்கியிருக்கிறது. 



    இதுகுறித்து ட்விட்டர் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ட்விட்டரில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு திட்டத்தை ட்விட்டர் இந்தியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளது.

    "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு நடைபெற இருக்கும் தேர்தல் ட்விட்டரில் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தளத்தில் நேபர்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த கடந்த சில மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த்திருக்கிறோம். அந்த வகையில் ட்விட்டர் தளத்திற்கு தேர்தல் ஆணையத்தை வரவேற்கிறோம்," என ட்விட்டர் இந்தியாவின் மஹிமா கௌல் தெரிவித்திருக்கிறார்.

    ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தேர்தல் தொடர்பான உண்மை தகவல்களை நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும். 
    Next Story
    ×