search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆன்லைனில் மட்டும் கிடைக்கும் கூகுள் கேமிங் சேவை துவக்கம்
    X

    ஆன்லைனில் மட்டும் கிடைக்கும் கூகுள் கேமிங் சேவை துவக்கம்

    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ஸ்டேடியா எனும் கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. #Google



    கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது கேமிங் சேவையை அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஜி.டி.சி. 2019 நிகழ்வில் கூகுள் தனது கேமிங் சேவையை அறிமுகம் செய்தது. கூகுள் ஸ்டேடியா என அழைக்கப்படும் புதிய சேவையை கொண்டு தொலைகாட்சியில் கேம்களை விளையாடலாம்.

    இதுமட்டுமின்றி கூகுள் ஸ்டேடியா பயன்படுத்தி கூகுள் க்ரோம்காஸ்ட் அல்ட்ரா கொண்டு லேப்டாப், டெஸ்க்டாப், டேப்லெட், அல்லது மொபைல் போன் உள்ளிட்டவற்றில் 4K தரம் நொடிக்கு 60 ஃபிரேம் வேகம் ஹெச்.டி.ஆர். தரத்தில் சரவுண்ட் சவுண்ட் நுட்பத்தில் கேம் விளையாடலாம். 



    ஸ்டேடியா கேமிங் சேவை முழுமையாக ஆன்லைனில் விளையாட வேண்டும் என்பதால், இண்டர்நெட் இணைப்புக்கு ஏற்ப கேம்பிளே அனுபவம் ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். கேம்களை உருவாக்க கூகுள் தனது டெவலப்பர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளது. ஸ்டேடியாவின் கிரவுட் பிளே அம்சம் கொண்டு பார்வையாளர்கள் நேரலையில் ஸ்டிரீம் செய்யப்படும் கேமில் கலந்துகொள்ளலாம்.

    கூகுளின் டேட்டா சென்டருடன் நேரடியாக இணைக்கப்படும் ஸ்டேடியா கண்ட்ரோலரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கேமிங் அனுபவத்தை வைபை இணைப்பின் மூலம் சிறப்பாக மேம்படுத்த முடியும். இதில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஸ்டன்ட் கேப்ச்சர் அம்சம் கொண்டு கேம்பிளேக்களை 4K தரத்தில் யூடியூபில் பகிர்ந்து கொள்ள முடியும்.



    இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் பில்ட்-இன் மைக்ரோபோன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கூகுள் ஸ்டேடியா ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பகுதிகளில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்வது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    கூகுள் ஸ்டேடியா அறிமுக வீடியோவை கீழே காணலாம்

    Next Story
    ×