search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி ரெட்மி 7 வெளியீட்டு விவரம்
    X

    சியோமி ரெட்மி 7 வெளியீட்டு விவரம்

    சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம். #Redmi7



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மார்ச் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி தலைவர் லு வெய்பிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரெட்மி 7 ஸ்மார்ட்போனுடன் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    வெளியீடு பற்றிய அறிவிப்புடன் ஸ்மார்ட்போனின் பிளாக், புளு மற்றும் ஆரஞ்சு கிரேடியன்ட் நிற எடிஷன்களின் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார். அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் ஏ.ஐ. வசதி கொண்ட டூயல் பிரைமரி கேமராக்கள், டாட் வடிவ நாட்ச் இடம்பெற்றிருக்கிறது.

    முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் வியட்நாம் வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இவற்றில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    சியோமி ரெட்மி 7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.26 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு, பின்க் மற்றும் பல்வேறு புதிய நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ தவிர மின்விசிறி, வெப் கேமரா, ஸ்மார்ட் கேமரா, வாக்யூம் கிளீனர், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களையும் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
    Next Story
    ×