search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் இப்படித் தான் இயங்கும்
    X

    மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் இப்படித் தான் இயங்கும்

    மோட்டோரோலா உருவாக்கி வரும் மடிக்கக்கூடிய ரேசர் போனில் குறிப்பிட்ட அளவு செயலிகள் மட்டுமே இரண்டாவது டிஸ்ப்ளேவில் இயங்கும் என கூறப்படுகிறது. #Motorola



    மோட்டோரோலா நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. மோட்டோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட் ரென்டர்களில் சில விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், தற்சமயம் மென்பொருள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போன் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவை கொண்டு தரவுகளை ஸ்கிரால் செய்து கொள்ளலாம். மேலும் முதற்கட்டமாக இரண்டாவது டிஸ்ப்ளேவில் குறிப்பிட்ட சில செயலிகளை இயக்குவதற்கான வசதியை மோட்டோரோலா வழங்கும் என தெரிகிறது.

    மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இருப்பதை போன்று முழுமையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்காது என XDA டெவலப்பர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளேவில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட சிஸ்டம் செயலிகளை மட்டுமே டிஸ்ப்ளே செய்யும் என கூறப்படுகிறது.



    ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது டிஸ்ப்ளேவினை இயக்க முடியும், எனினும் இந்த நிலையில் பயனர்கள் மோட்டோ டிஸ்ப்ளே, மோட்டோ ஆக்ஷன்ஸ் மற்றும் மோட்டோ கேமரா உள்ளிட்டவற்றையே இயக்க முடியும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்ப்ளே டிராக்பேட் போன்றும் இயங்கும் என தெரிகிறது.

    இதை கொண்டு க்ரோம் பிரவுசிங் செய்ய முடியும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த டிஸ்ப்ளேவில் அதிகபட்சம் ஆறு க்விக் செட்டிங்களை காண்பிக்கும் என்றும் இவை டைல் வடிவில் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. எனினும், இதை பயனர்கள் ஸ்கிரால் செய்ய முடியுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    மெயின் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாவது டிஸ்ப்ளேக்களில் வெவ்வேறு வால்பேப்பர்களை வைத்துக் கொள்ள மோட்டோரோலா புதிய அம்சத்தை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மோட்டோரோலா சில அம்சங்களை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×